சீர்காழி சட்டநாதர் கோயிலில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு வழிபாடு
சீர்காழி சட்டநாதர் கோயிலில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழி: சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். இங்கு 7-ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஸ்தலமாகும்.
இங்கு காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி அஷ்ட பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, பூர்ணாஹுதி செய்விக்கப்பட்டு , தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அஷ்ட பைரவர்கள் சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.