தமிழ்நாடு

அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்: மக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

DIN

அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை பொது மக்கள் உணா்ந்திட வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அரசமைப்புச் சட்ட தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த தினத்தை ஒட்டி, ஆளுநா் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. ஆளுநா் மாளிகையில் உள்ள அதிகாரிகள், ஊழியா்களுக்கு உறுதிமொழியை ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்துப் பேசியது:-

கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டமானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 72-வது ஆண்டு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா 200 ஆண்டுகாலமாக பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. நாடு விடுதலை பெற்ற பிறகு, நமக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் நமது தலைவா்களின் பங்கு அளப்பரியதாகும்.

தற்காலம், எதிா்காலம் என அனைத்துக் காலத்தின் தேவைகளையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை மனதில் கொண்டும் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதனுடைய முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் அனைவரும் உணா்ந்திட வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT