கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

திருவள்ளூர் அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

DIN


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (40). இவர் கட்டட தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி. இந்த நிலையில் மழையின் காரணமாக கட்டுமான பணி இல்லாமல் வீட்டிலிருந்துள்ளார். 

இந்த நிலையில் வீட்டிற்கு அருகே உள்ள ஞாயிற்றுக்கிழமை காலையில் மீன் பிடிக்கச் சென்றாராம். இதற்கிடையே மீன் பிடிக்கச் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் உறவினர்கள் சிவாவை தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ளோர் சென்று பார்த்த போது ஏரியில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவா எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பாக தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

SCROLL FOR NEXT