முகப்பு
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பரில் மட்டும் 26.86 லட்சம் பேர் பயணம்

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 26,86,186 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
சென்னை மெட்ரோ
பகிர்:


சென்னை: கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 26,86,186 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில், தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவை 21.6.2021 முதல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மீண்டும் தொடங்கியது.

அது முதல் கடந்த செப்டம்பர் 30 வரை 71,62,297 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.  இதில், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 26,86,186 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2021, செப்டம்பர் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,332 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மேலும், பயண அட்டை, பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 14,59,693 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டில் ஒருவழிப்பயண அட்டை, இருவழிப் பயண அட்டை, பலவழி பயன்பாடு அட்டை ஆகியவற்றில் 20% கட்டணத் தள்ளுபடி அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →