பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை 
தமிழ்நாடு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்தின் கீழ், 66 பேர் வாழ்நாள் முழுக்க தேர்வெழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்தின் கீழ், 66 பேர் வாழ்நாள் முழுக்க தேர்வெழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில் மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே, இந்த விவகாரத்தில், 199 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி?

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வை 2017 செப்டம்பா் 16-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தியது. இந்தத் தோ்வை ஒரு லட்சத்து 33 ஆயிரம் போ் எழுதினா். இதையடுத்து 2017-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகின.

இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகப் புகாா்கள் எழுந்தன. மேலும், இந்தத் தோ்வில் வெளிமாநிலங்களைச் சோ்ந்த பலா் வெற்றி பெற்றிருந்தனா். இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரிய அலுவலா்கள் விசாரணை நடத்தினா். அந்த விசாரணையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டோா் மீது காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், ஆசிரியா் தோ்வு வாரியம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட 199 போ் வாழ்நாள் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுகளை எழுதுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது. 

தற்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 66 பேருக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுகளை எழுதுவதற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆரின் கீழ் 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் 95% மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

எஸ்ஐஆர்-க்கு எதிராக தவெக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

சிஎஸ்கே தக்கவைத்த, விடுவித்த வீரர்கள் விவரம்!

ஜூபிலி ஹில்ஸ் வெற்றி: ராகுல், கார்கேவுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

திரைத்துறையில் 50 ஆண்டுகள்: ரஜினிகாந்த், பாலகிருஷ்ணாவுக்கு சர்வதேச திரைப்படத் திருவிழாவில் கௌரவம்!

SCROLL FOR NEXT