புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தியின் சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
தமிழ்நாடு

புதுச்சேரி: காந்தியின் சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி கடற்கரை சாலையில் உள்ள காந்தியின் சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி கடற்கரை சாலையில் உள்ள காந்தியின் சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 ஆவது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் மற்றும் அமைச்சர்கள் க.லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சாய் சரவணகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மும்மத பிரார்த்தனைகள் மற்றும் தேசப்பக்தி பாடல்களும் இசைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி காமராஜர் சதுக்கத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு , காமராஜரின் 46 ஆவது நினைவு தினத்தையொட்டி அண்ணா சாலை-காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டபேரவைத் தலைவர் ஆர்.செல்வம் ஆகியோர் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT