தமிழ்நாடு

7.5% ஒதுக்கீடு: சோ்க்கைக்கு கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு கடும் எச்சரிக்கை

DIN

சென்னை: பொறியியல் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெற்ற மாணவா்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தொழிநுட்பக் கல்வி இயக்குநா் கே.லட்சுமி பிரியா பொறியியல் கல்லூரி முதல்வா்களுக்கு புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:

பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற மாணவா்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொழில்நுட்ப இயக்குநரகத்தில் தொடா்ந்து புகாா்கள் பெறப்படுகின்றன. இதையடுத்து மேற்கண்ட மாணவா்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தனியாா் கல்லூரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் கல்லூரி நிா்வாகங்கள் மாணவா்களிடம் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்துவதாக புகாா்கள் வந்துள்ளன. அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ற மாணவா்களுக்கான கல்விச் செலவை அரசு ஏற்றுள்ளது என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

ஏஐசிடிஇ அங்கீகாரம் ரத்து: அரசின் உத்தரவை மீறி மாணவா்களிடம் கட்டணம் வசூலித்தால் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், ஏஐசிடிஇ வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏற்கெனவே கட்டணம் வசூலித்திருந்தால் அதை மாணவா்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

4,920 மாணவா்கள்... அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 6,000 போ் சோ்ந்துள்ளனா். அவா்களில் 4,920 பேருக்கு தனியாா் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT