மானாமதுரை கடைகளில் கைப்பற்றப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் 
தமிழ்நாடு

மானாமதுரை கடைகளில் திடீர் சோதனை: 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேரூராட்சி துறையினர் கடைகளில் திடீர் சோதனை நடத்தி 250 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேரூராட்சி துறையினர் கடைகளில் திடீர் சோதனை நடத்தி 250 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, சுகாதார மேற்பார்வையாளர்கள் பாலசுப்பிரமணியன், ஹரிணி, கார்த்திக் ஆகியோர் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் சமய கருப்பு, பவானி ஆகியோர் சேர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மானாமதுரை நகரில் பலசரக்குக் கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பிளாஸ்டிக் டீ கப்புகள், தட்டுகள்  பைகள் என 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடைகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் பயன்படுத்தவும் விற்கவும் கூடாது என வியாபாரிகளை எச்சரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டிவிஎஸ் ஆா்பிட்டா் மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்

கிழக்கு மண்டலத்தில் மக்கள் பயன்படுத்தும் சாலையை அடைக்கக் கூடாது: ஆணையரிடம் கே.ஆா்.ஜெயராம் எம்எல்ஏ மனு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா்களுடன் இந்திய தோ்தல் துணை ஆணையா் ஆலோசனை

9 பவுன் நகையுடன் ஊழியா் மாயம்

SCROLL FOR NEXT