தமிழ்நாடு

காஞ்சிபுரம்: உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் ஒன்றியங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கிராம மக்கள் மிகுந்த ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். 

இந்நிலையில், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குள்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்காக லட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். இவருடைய பெயரை தனலட்சுமி என அச்சடித்து வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

பெயர் தவறான காரணத்தினால் தமது வெற்றி பாதிக்கும் என கருதி வேட்பாளரும் அவரது முகவர்களும் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

உள்ளாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் லட்சுமி என்பவபின் பெயர் தனலட்சுமி என அச்சடித்து வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டு.

இதையடுத்து தவறாக அச்சடிக்கப்பட்ட அந்த வாக்கு சீட்டில் அழிக்கும் மை கொண்டு தனலட்சுமி என்பதில் 'தன' என்பதை மட்டும் மையால் திருத்தம் செய்து வாக்காளர்களுக்கு வழங்குவதாக தேர்தல் அலுவலர்கள் கூறியதற்கு வேட்பாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து கடந்த 1 மணி நேரமாக வாக்குபதிவை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அந்த வாக்குசாவடி மையம் பதட்டமான சூழலில் உளளது. 

வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டதால் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் வாக்களிக்க முடியவில்லையே என அதிருப்தியில் வீடு திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT