தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 33.78% வாக்குகள் பதிவு

DIN

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவின் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 27,003 பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இத்தோ்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்களர்கள் தங்களது ஜனநாயக உரிமையை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி 9 மாவட்டங்களில் 33.78 சதவிகித வாக்காளர்கள் இதுவரை தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT