தமிழ்நாடு

பாபநாசம் தாமிரபரணியில் தர்ப்பணம் செய்யத் தடை: வெறிச்சோடியது பாபநாசம்

DIN

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் தாமிரபரணியில் மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாபநாசம் மற்றும் தாமிரபரணி கரையோரங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆண்டுதோறும் மகாளய அமாவாசை அன்று பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு புனிதநதிகளில் நீராடி தர்ப்பணம் செய்து பிதுர் கடன் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  காரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் வழிபடவும் புனிதநதிகளில் நீராடும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணியிலும் நீராடி தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய பாபநாசம் படித்துறை

தாமிரபரணி நதிக் கரைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து கடனா நதி கரையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பொது மக்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர். அனைத்து நதிகளிலும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடனா நதி கரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக் கணக்கான வந்து ஆம்பூர் கடனாநதியில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்கு பிதுர்கடன் செய்தனர்.

மேலும் பொதுமக்கள் கூறும் போது, பாபநாசம் ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு பிதுர்கடன் கழிப்பது தான் சிறந்தது. கொரணாவை காரணம் காட்டி அரசு கலாச்சார பழக்கவழக்கங்களுக்குத் தடை விதிப்பது மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. வார இறுதிநாள்களில் கோவில்களைத் திறப்பதோடு புனிதநதிகளில் நீராட விதித்துள்ள தடையையும் அரசு நீக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT