திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தொண்டர்கள். 
தமிழ்நாடு

அனைத்து நாள்களிலும் திருக்கோயில்களை திறக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கத்தில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் அனைத்து நாள்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

திருச்சி: தமிழகத்தில் அனைத்து நாள்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசானது, ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்து சமுதாய பண்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஹிந்து திருக்கோயில்களை விடுமுறை நாள்களிலும். பண்டிகை மற்றும் விசேஷ நாள்களிலும் பூட்டி வைத்துள்ளது.

தமிழகத்தில் கேளிக்கை நிகழ்வுகள், கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள், குளிரூட்டப்பட்ட பொது போக்குவரத்துக்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தையும் திறப்பதற்கு அனுமதி கொடுத்து விட்டு வஞ்சகத்தோடு ஹிந்து திருக்கோயில்களை மட்டும் பூட்டி வைத்துள்ளது.

இதனை கண்டித்து ஹிந்து திருக்கோவில்களை பண்டிகை மற்றும் விசேஷ நாள்களிலும் திறக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் இராமசீனிவாசன் சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT