தமிழ்நாடு

வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்து அலுவலர் அமுதராணி தலைமையில் மருத்துவக்குழுவினர் வடுகப்பட்டி, அக்கமாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அதில் அன்னதானப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஓட்டலாம்பட்டி பிரிவு சாலையில் உணவு விடுதி  நடத்தி வரும் மோகன், தங்கம்மாள் தம்பதியர்களிடம் மருத்துவ அலுவலர் தடுப்பூசி செலுத்தி கொண்டீர்களா என்று கேட்டுள்ளார். 

அப்போது தங்கம்மாள் தனது கணவர் 1974 ஆம் ஆண்டு முதல் தன்னை பிரிந்து வாழ வேண்டுமென நினைக்கிறார். அதனால் அவர்தான் உங்களுக்கு தகவல் சொல்லியிருப்பார் என்று கூறும் விடியோ சங்ககிரி சமூக வலைத்தலங்களில் பரவி வருகின்றன.

இது பொதுமக்கள் மத்தியில் சிந்தனையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT