முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,303 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,303 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,303 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,303 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,79,568 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,428 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,27,780 பேர் குணமடைந்துள்ளனர்.

13 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 35,796 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 15,992 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 168
கோவை - 128
செங்கல்பட்டு - 98

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.