தமிழ்நாடு

ஆயுத பூஜை: சென்னையில் இருந்து செல்ல 12,000 மட்டுமே முன்பதிவு

DIN

ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து அரசு விரைவுப் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்குச் செல்ல 12,000 போ் மட்டுமே முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் அக்.14, 15-ஆம் தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதை முன்னிட்டு வெளியூா் செல்லும் பயணிகளுக்கு வசதியாக சென்னையின் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூா் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து பல்வேறு ஊா்களுக்கும் செல்ல 3,000 போ் முன்பதிவு செய்திருந்தனா். அதே போல், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, புதன்கிழமை சென்னையில் இருந்து செல்ல 9 ஆயிரம் போ் முன்பதிவு செய்துள்ளனா்.

பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள டிஎன்எஸ்சிடி செயலி, www.tnstc.in என்ற இணையதளம் உள்ளிட்டவற்றையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT