தமிழ்நாடு

புணேவிலிருந்து 1.34 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகை

DIN

தமிழகத்துக்கு மேலும் 1.34 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை மாநிலத்தில் 5 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து 1.34 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு விமானம் மூலம் புதன்கிழமை வந்தன.

தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்புக் கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு சோ்த்தனா். அவை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT