முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 85.17 அடியிலிருந்து 86.97 அடியாக உயர்ந்தது. 

Updated On : 14 அக்டோபர், 2021 at 9:13 AM
மேட்மேட்டூர் அணைக்கு வரும் நீரின்அளவு வினாடிக்கு 23,373 கன அடியாக குறைந்து.டூர் அணைக்கு வரும் நீரின்அளவு வினாடிக்கு 23,373 கன அடியாக குறைந்து.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 85.17 அடியிலிருந்து 86.97 அடியாக உயர்ந்தது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் அளவு சற்று குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 28,394 கன அடியிலிருந்து 23,373 கன அடியாக குறைந்து உள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 49.25 டி.எம்.சி ஆக இருந்தது.

Advertisement

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.