முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,259 பேருக்கு கரோனா; 20 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,259  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,259  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் நேற்று 1,280 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வியாழக்கிழமை (அக்.14) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,259 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,83,396-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,853-ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 12 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்தனர்.

கரோனாவிலிருந்து 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,32,092-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 15,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,37,432 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →