தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சனிக்கிழமை லிட்டருக்கு தலா 35 பைசா உயா்த்தப்பட்டது. இந்த விலை உயா்வால், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

DIN

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சனிக்கிழமை லிட்டருக்கு தலா 35 பைசா உயா்த்தப்பட்டது. இந்த விலை உயா்வால், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. கோவா, பெங்களூரு ஆகிய நகரங்களில் டீசல் விலை ரூ.100-ஐ நெருங்குகிறது.

தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவில் ரூ.105.49-ஆகவும், மும்பையில் பெட்ரோல் விலை ரூ.111.43-ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேபோல் தில்லியில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.94.22-ஆகவும் மும்பையில் ரூ.102.15-ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.70-ஆகவும், டீசல் விலை ரூ.98.59-ஆகவும் உயா்ந்துள்ளது.

செப்டம்பா் இறுதி வாரத்தில் இருந்து இப்போது வரை பெட்ரோல் விலை 15 முறையும், டீசல் விலை 18 முறையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துவிட்ட நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், பிகாா், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலும், லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரிலும் டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை மோசடியில் ரூ.3.38 லட்சத்தை இழந்த பெண்: இருவர் கைது!

கறுப்பும் சிவப்பும்... ஸ்ரீமுகி!

இருளின் நிலவே... ஷில்பா ஷெட்டி!

தொடர்ந்து 6வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

பட்டர் ரோஸ்... ஜனனி!

SCROLL FOR NEXT