வருமான வரித் துறையினர் எனது இல்லத்தில் எந்த ஆவணங்களையும் பறிமுதல் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அ்மைச்சர் சி. விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கல்லூரிகள், கல் குவாரி உள்ளிட்ட 28 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் 20 துணைக் கண்காணிப்பாளர்களின் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் 30 குழுக்களாகப் பிரிந்து திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
இதில் ரூ.23.82 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள், வன்வட்டுகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சி.விஜயபாஸ்கர், வருமானவரி சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.
எனது வீட்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. பொதுவாழ்க்கையில் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து வருகிறேன்.
மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. அதிமுகவிற்கு சோதனை என்பது புதிதல்ல. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.