கரோனா சிகிச்சையில் 14,326 போ்
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, 14,326 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, 14,326 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் இதுவரை 4.96 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 26 லட்சத்து 89,463 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,179 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேருக்கும், கோவையில் 127 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,407 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 39,209-ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 14,326 போ் உள்ளனா்.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 16 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,928-ஆக அதிகரித்துள்ளது.