முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் அதிகரிக்கும் கரோனா: கோவையில் குறைகிறது

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று (அக்.19) அதிகரித்துள்ளது. புதிதாக 156 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று (அக்.19) அதிகரித்துள்ளது. புதிதாக 156 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. எனினும் சென்னையை விட தற்போது கரோனா பாதிப்பு கோவையில் குறைந்துள்ளது.

கோவையில் புதிதாக 127 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 130 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சென்னையில் புதிதாக 156 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று புதிதாக 150 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

26 மாவட்டங்களில் கரோனா உயிரிழப்பு இல்லை 

காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, தென்காசி, திருவள்ளூர், திருப்பத்தூரில் உயிரிழப்பு இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →