தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,170 பேருக்கு கரோனா; 20 பேர் பலி

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,170   பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று (அக்.19) 1,179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை (அக்.20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,170 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,90,633-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,418 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,40,627-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 14,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,28,286 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு

தமிழகத்தில் அதிகபட்சமாக 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 141 பேரும், செங்கல்பட்டில் 93 பேரும், ஈரோட்டில் 91 பேரும், திருப்பூரில் 67 பேரும், சேலத்தில் 61 பேரும், தஞ்சாவூரில் 51 பேரும், நாமக்கல்லில் 48 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT