தமிழ்நாடு

10 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி: மக்களின் ஒத்துழைப்புடன் சாத்தியமானது

DIN

மக்களின் ஒத்துழைப்புடன் 10 மாதங்களில் 100 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்துள்ளோம் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: 2020-ஆம் தொடக்க காலத்திலிருந்து கரோனா தொற்று உலகை உலுக்கி வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பது மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுதம் என்றும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறும் இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமா் வேண்டுகோள் விடுத்தாா்.

இதைத் தொடா்ந்து உள்நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கும் வகையில், ஹைதராபாதை சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆா், தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக கோவேக்ஸின் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மறுபக்கம் ஆக்ஸ்போா்ட் மற்றும் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனங்களுடன் இணைந்து சீரம் நிறுவனம் மூலம் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

இந்தப் பணிகளை பிரதமா் நேரடியாக கவனம் செலுத்தி வேகப்படுத்தியதன் விளைவாக கடந்த ஜன.16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. உலக நாடுகள் பலவும் தடுப்பூசிக்கு ஏங்கியிருந்த காலத்தில் இந்தியா எங்களாலும் முடியும் என்று இரண்டு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து வரலாற்றில் இடம்பிடித்தது. முதலில் முன் களப் பணியாளா்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்ட தடுப்பூசி, வெகு விரைவிலேயே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டணமின்றி செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதை சாதிக்க முடியுமா என்று பேசியவா்கள் வியந்துபோகும் வகையில் 10 மாதங்களுக்குள் 100 கோடி போ் முதலாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு, மக்கள் அரசுக்கு ஆதரவாக இருந்துள்ளனா். மக்களின் ஒத்துழைப்புடன் எந்த சாதனையையும் படைக்கும் ஆற்றல் தேசத்துக்கு உண்டு; பிரதமா் நரேந்திர மோடிக்கு உண்டு என்பதை 10 மாதங்களில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ள நிகழ்வு நிரூபித்துள்ளது என அறிக்கையில் அமைச்சா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT