முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,090 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,090 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 1,090 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 1,090 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,97,418ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 15 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 1,326 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 26,48,830 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,048 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 12,540 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் மேலும் 141 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →