முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27,251 கன அடியாக உயர்வு

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின்  நீர்வரத்து 27,251 கன அடியாக அதிகரித்ததன் காரணமாக நீர்மட்டம் 102.79 அடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 26 அக்டோபர், 2021 at 1:17 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27,251 கன அடியாக உயர்வு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:57 AM

சேலம்: இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின்  நீர்வரத்து 27,251 கன அடியாக அதிகரித்ததன் காரணமாக நீர்மட்டம் 102.79 அடியாக உயர்ந்துள்ளது. 

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.05  அடியிலிருந்து 102.79அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.74 அடி உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 21,390 கன அடியிலிருந்து 27, 251 கன அடியாக  அதிகரித்துள்ளது.

Advertisement

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு  100 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது..  கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 68.50 டிஎம்சியாக இருந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்  உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும் மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.