மதுரை நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த செல்லூர் கே.ராஜூ 
தமிழ்நாடு

அதிமுகவில் எவ்வித சர்ச்சையும் இல்லை: செல்லூர் கே.ராஜூ

சசிகலா விவகாரத்தால் அதிமுகவில் எந்தவித சர்ச்சையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

DIN

மதுரை: சசிகலா விவகாரத்தால் அதிமுகவில் எந்தவித சர்ச்சையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வியாழக்கிழமை வந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

“சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் எந்தவித சர்ச்சையும் கிடையாது. சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை.

அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தான் ஒருங்கிணைப்பாளர் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்று சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால், பிற நிர்வாகிகளும் அதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை.”
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT