மதுரையில் தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை 
தமிழ்நாடு

மதுரையில் தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார்.

DIN

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா மற்றும் 53 ஆவது குருபூஜை சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை துவங்கின. 

இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு சசிகலா வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

பின்னர் மதுரை தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பசும்பொன் கிராமத்திற்கு சென்றார்.

கோரிப்பாளையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் அமமுகவினர் ஏராளமானோர் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

SCROLL FOR NEXT