தமிழ்நாடு

தீபாவளிக்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்

DIN

தீபாவளியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா், தீபாவளியை முன்னிட்டு, வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு முடிந்து, காத்திருப்போா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்காக, 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தாம்பரம்-நாகா்கோவில் சிறப்பு ரயில் (06003-06004), சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா் சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல்-சந்ரகாச்சி(06036-06035) ரயில் ஆகிய மூன்று சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில் இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT