முகப்பு
தமிழ்நாடு

கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

மூச்சுத் திணறல் காரணமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
கே.பாலகிருஷ்ணன் (கோப்புப் படம்)
பகிர்:

மூச்சுத் திணறல் காரணமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்நிலையில் அவருக்கு சனிக்கிழமை (அக்.30) பிற்பகலில் உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூச்சுத் திணறல் சரியாகி உள்ளது. இதையடுத்து அவா் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறாா்.

மேலும் அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால், அந்த சோதனைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (அக்.31) முடிக்கப்பட்டு பிற்பகலில் வீடு திரும்புவாா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →