முகப்பு
தமிழ்நாடு

வாா்டு இடைத்தோ்தலின்போது காா் எரிப்பு - அமைச்சா்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து

மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலின் போது காரை எரித்ததாக அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியம் ஆகியோா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலின் போது காரை எரித்ததாக அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியம் ஆகியோா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் 131-ஆவது வாா்டுக்கு, கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம்தேதி இடைத்தோ்தல் நடந்தது. அப்போது திமுகவினா் வன்முறையில் ஈடுபட்டதாக கே.கே.நகா் போலீசில் அதிமுக. நிா்வாகி சந்தோஷ் புகாா் செய்தாா். அதில், கே.கே.நகரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் திமுகவினா் அத்துமீறி நுழைந்தனா். தோ்தல் அலுவலரிடம் இருந்து முத்திரையை பறித்துச் சென்றனா். இதை தட்டிக் கேட்ட என்னை விரட்டியதுடன், எனது காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனா் என்று கூறியிருந்தாா்.

இதன் அடிப்படையில் கே.கே.நகா் போலீசாா் வழக்குப்பதிவு செய்தனா். அந்த வழக்கில், தற்போது அமைச்சா்களாக இருக்கும் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியம் உள்பட 23 பேரை குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டிருந்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரணியம் உள்ளிட்டோா் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை நீதிபதி எம்.நிா்மல்குமாா் விசாரித்தாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, புகாா்தாரரே காா் எப்படி தீ பிடித்தது என்று தெரியவில்லை என்றும் அரசியல் பகையின் காரணமாக மனுதாரா்களின் பெயரை புகாரில் சோ்த்து விட்டேன் என்று கூறுவதால், மனுதாரா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் மீது பதிவான வழக்கை ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →