முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் இருப்போா் 11,685-ஆகக் குறைந்தது

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 11,685-ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 11,685-ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, சனிக்கிழமை மேலும் 1,021 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 120 பேருக்கும், கோவையில் 116 பேருக்கும், செங்கல்பட்டில் 85 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,01,614- ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து சனிக்கிழமை 1,172 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.53 லட்சத்தைக் கடந்துள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,097-ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →