முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் நாளை முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், 

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். 

புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. 

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. 

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →