அருப்புக்கோட்டை: நியாய விலைக்கடை, பயணிகள் நிழற்குடையைத் திறந்து வைத்த அமைச்சர்
அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நியாய விலைக்கடை, பயணிகள் நிழற்குடையை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் திறந்துவைத்தார்.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராமங்களான கஞ்சநாயக்கன்பட்டி, ஆன்டிபட்டி உடையனாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் முறையே நியாயவிலைக்கடைக் கட்டடம், பயணிகள் நிழற்குடை, கலையரங்கம் ஆகியவற்றை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் சனிக்கிழமை இரவு தொடக்கி வைத்து பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயசூரியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.