தமிழ்நாடு

விநாயகர் சிலைகள் நிறுவத் தடை: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

DIN



அவிநாசி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலைகள் நிறுவத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து குன்னத்தூரில் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலத்துடன் கோலாகலாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவவும், விழா கொண்டாடுவது, நீர்நிலைகளில் அமைப்புகள் சார்பில் கரைப்பது உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக தனி நபர் வீடுகளில் வைத்து வழிபாடு செய்து, தனி நபர் மட்டும் நீர் நிலைகளில் கரைப்பதற்கும், கோயில்களில் வைத்து செல்வதற்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதைக்கண்டித்து குன்னத்தூர், அவிநாசி, திருமுருகன்பூண்டி, கருவலூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT