தமிழகத்தில் புதிதாக 1,568 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று மேலும் 1,568 பேருக்கு கரோனா இன்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 1,568 பேருக்கு கரோனா இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் இதுவரை 4.27 கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகளும் கடந்த 24 மணிநேரத்தில் 1,60,742 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 26,19,511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 239 பேருக்கும், சென்னையில் 162 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 1,657 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 68,161-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,370 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 19 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,980-ஆக அதிகரித்துள்ளது.