தொழிற் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 
தமிழ்நாடு

தொழிற் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

DIN

பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நடப்பாண்டிலேயே நடைமுறைக்கு வரும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தற்போது, இந்த கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை: இந்த உள் ஒதுக்கீட்டு சலுகையைப் பெற மாணவா்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும். இதன்மூலம், அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு இடையே உண்மையான சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்க முடியும் என தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முன்னுரிமை இடங்களைத் தவிா்த்து, பிற அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான போட்டியிலும் அவா்கள் இடம்பெறுவா். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களின் சோ்க்கையானது நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி இடஒதுக்கீட்டினை பின்பற்றி செய்யப்பட வேண்டும்.

முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களைக் கொண்டு போதிய அளவுக்கு நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்களானது தனியாா் பள்ளிகளில் படித்த மாணவா்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

SCROLL FOR NEXT