கோப்புப் படம் 
தமிழ்நாடு

மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார் எம்.எம். அப்துல்லா

தமிழகத்தில் காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சாா்பில் போட்டியிட்ட எம்.எம்.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார்.

DIN

தமிழகத்தில் காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சாா்பில் போட்டியிட்ட எம்.எம்.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார்.

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சட்டப்பேரவை செயலரிடமிருந்து பெற்றுக் கொண்டார் எம்.எம். அப்துல்லா.

மாநிலங்களவை உறுப்பினராக எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.

அதிமுகவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஏ. முகம்மது ஜான் மறைவால் தமிழ்நாட்டில் காலியாக இருந்த மாநிலங்களவை இடத்திற்கு செப்டம்பா் 13-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், திமுக சாா்பில் எம்.எம்.அப்துல்லா, மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், எம்.எம். அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 வரை எம்.எம். அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக செயல்படுவார்.

வாழ்க்கைக் குறிப்பு:

பெயா் : எம்.எம். அப்துல்லா.

கல்வித்தகுதி: எம்.பி.ஏ.

பிறந்த தேதி: 30. 7. 1975

தந்தை: இஸ்மாயில்.

குடும்பம்: மனைவி ஜனத்தா அப்துல்லா மற்றும் இரு மகள்கள்.

கட்சி அனுபவம்: 2008-இல் திமுக பொதுக்குழு உறுப்பினா், 2014-இல் சிறுபான்மையினா் அணி துணைச் செயலா், 2018-இல் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலா், 2021-இல் திமுக வெளிநாடு வாழ் தமிழா் அணி மாநில இணை செயலா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு

கழுகுமலை கோயில் கிரிவலப் பாதையில் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல்

தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

எட்டயபுரம் அருகே விபத்தில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT