தமிழ்நாடு

நாமக்கல்: 10-ஆம் வகுப்பு மாணவிக்கு கரோனா தொற்று  உறுதி

நாமக்கல் அருகே மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

நாமக்கல்: நாமக்கல் அருகே மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. நோய்த்தொற்று குறைய தொடங்கியதையடுத்து கடந்த புதன்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் எவ்வித நோய் தோற்றும் மாணவர்களுக்கு இல்லாத நிலையில், வெள்ளிக்கிழமை நாமக்கல் அருகே மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. 

மாணவி தொற்று பாதிப்புக்கு உள்ளான தகவலால் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT