தமிழகத்தில் புதிதாக 1,575 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,575 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,575 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக 1,575 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,21,086 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் 2ஆவது நாளாக 30ஆயிரத்துக்கு கீழ் கரோனா பாதிப்பு
மேலும் 20 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 35,000 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் 1,610 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,69,771 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 16,315 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:
- கோவை - 244
- சென்னை - 167
- ஈரோடு - 109
- செங்கல்பட்டு - 99