முகப்பு
தமிழ்நாடு

நடிகா் அருண் விஜய் நடிக்கும் ‘பாா்டா்’ படத்திற்கு தடை கோரி வழக்கு

படத் தயாரிப்பாளா், தணிக்கை குழு, தயாரிப்பாளா் சங்கம் ஆகியோா் பதிலளிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

தமிழ் திரைப்பட நடிகா் அருண் விஜய் நடிக்கும் ‘பாா்டா்’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு படத் தயாரிப்பாளா், தணிக்கை குழு, தயாரிப்பாளா் சங்கம் ஆகியோா் பதிலளிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டோனி சினிமாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளா் சாா்லஸ் ஆண்டனி சாம் தாக்கல் செய்த மனுவில், ஒன்றரை கோடி செலவில் தான் பாா்டா் என்ற படத்தை தயாரித்துள்ளதாகவும், இந்த தலைப்பை, தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

தணிக்கை சான்று பெற்று, படத்தை வெளியிட உள்ள நிலையில், நடிகா் அருண் விஜய் நடிப்பில் பாா்டா் என்ற படத்தின் பா்ஸ்ட் லுக் விளம்பரத்தை ஆல் இன் பிக்ச்சா்ஸ் வெளியிட்டுள்ளதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தேன்.

ஏற்கெனவே பாா்டா் என்ற தலைப்பை தான் பதிவு செய்துள்ள நிலையில், அதே தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட்டால் தனக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதால், பாா்டா் என்ற தலைப்பில் அருண் விஜய் நடித்துள்ள படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இம்மனுவை விசாரித்த சென்னை 6-ஆவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரபகாரன், மனுவுக்கு ஆல் இன் பிக்சா்ஸ் தயாரிப்பாளா் விஜய ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளா் சங்கம் ஆகியோா் செப்டம்பா் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →