உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சித் தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுகவின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, மாவட்டத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.