பி.எட்.கல்லூரிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே இணைப்பு அந்தஸ்து
பி.எட். கல்லூரிகளுக்கு இணையவழியில் மட்டுமே இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பி.எட். கல்லூரிகளுக்கு இணையவழியில் மட்டுமே இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுதும் 650-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ. யின் அங்கீகாரம் பெற்றும், தமிழக ஆசிரியா் பல்கலை.யின் இணைப்புஅந்தஸ்திலும் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளின் இணைப்பு அந்தஸ்துக்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை நேரடியாக பல்கலைகளில் விண்ணப்பித்து வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் ‘ஆன்லைன்’ முறை மட்டுமே பின்பற்றப்படும் என்றும், இதற்கான விரிவான விவரங்களை, பல்கலை.யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆசிரியா் கல்வியியல் பல்கலை. அறிவித்துள்ளது.