புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி ஆளுநருடன் சந்திப்பு 
தமிழ்நாடு

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி ஆளுநருடன் சந்திப்பு

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தார். 

DIN


புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தார். 

புதுசேரியில் முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

ஆளுநர் தமிழிசை உரையாற்றி தொடங்கிவைத்தார். அன்றைய தினமே முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்தல், பட்ஜெட் மீதான விவாதங்கள், மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று, வெள்ளிக்கிழமை மாலை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தது.

நிறைவாக முதல்வர் ரங்கசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டும், உறுப்பினர்கள் கேள்விக்கு பதில் அளித்தும் பேசினார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதல்வர் என். ரங்கசாமி ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்துப் பேசினார்.

அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர், புதுச்சேரி சட்டப்பேரவையில் 15 ஆவது சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தமைக்கும், மாநில அரசுக்கு கொடுத்துவரும் ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

சிறிது நேர சந்திப்புக்குப் பிறகு ஆளுநர் மாளிகைக்கு வெளியே வந்த முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டபோது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார். 

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதல்வர் மற்றும் ஆளுநருடன் இணக்கமாக  செயல்படும் வகையில், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு, இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தேஜ கூட்டணி வட்டாரத்தில் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT