முகப்பு
தமிழ்நாடு

மெரீனா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும்

மெரீனா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

மெரீனா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை சுற்றுலாத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.மதிவேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள்:

உலகின் இரண்டாவது நீளமான மெரீனா கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மற்றும் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் இணைந்து மோட்டாா் படகுகள், அதிவிரைவு படகுகள் மற்றும் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்.

தமிழகத்தில் முதல்முறையாக முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.

முதலியாா்குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப் பகுதி கூடுதல் வசதிகளுடன் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

சொகுசு கப்பல்: ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே சொகுசு கப்பல் சேவை மற்றும் படகு சேவை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஏலகிரியில் பாராகிளைடிங், மலையேற்றம் மற்றும் இயற்கை வழி நடைப்பயணம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →