சிவகிரி அருகே கார் பள்ளத்தில் உருண்டதில் 3 பேர் பலி 
தமிழ்நாடு

சிவகிரி அருகே கார் பள்ளத்தில் உருண்டதில் 3 பேர் பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் இறந்தனர்.

DIN

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் இறந்தனர்.

மதுரை செல்லூரைச் சேர்ந்த அருண்குமார், பிரபு, பேச்சிமுத்து, ஜான்சன், மன்சூர் அலிகான், கப்பலூரை சேர்ந்த சுரேஷ் குமார் ,ராஜேஷ் குமார், வில்லாபுரத்தை சேர்ந்த ஜான்சன் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு காரில் குற்றாலத்திற்கு சென்றனர்.

பின்னர் சனிக்கிழமை அதிகாலை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 
சிவகிரியை அடுத்த மொட்டை மலை அருகே சென்று கொண்டிருந்தபோது கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், செல்லூரைச் சேர்ந்த நாகராஜ் மகன் பிரபு (24), கப்பலூரைச் சேர்ந்த மங்கலராஜ் மகன் சுரேஷ்குமார் (31) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரை ஓட்டிச்சென்ற  முகமது நயினார் மகன் மன்சூரலிகான் (28 )திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்த அருண்குமார், பேச்சிமுத்து, ஜான்சன், ராஜேஷ்குமார் ஆகியோர் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக சிவகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT