தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன: அமைச்சர் தங்கம் தென்னரசு

DIN

தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கி.மு.8 ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடைந்த துறைமுகமாக கொற்கை இருந்துள்ளது. 

பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவு வந்துள்ளது. கங்கைச் சமவெளி நாகரிகத்திற்கும் வைகைச் சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மௌரியப் பேரரசு காலத்திற்கு முந்தைய காசு கீழடியில் கிடைத்துள்ளது. 

கீழடி நாகரிகம் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற, தொழில் சமூகமாக இருந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் பெயர் பல்வேறு காலகட்டங்களில் பொருநை ஆறு என அழைக்கப்பட்டு வந்துள்ளது. 

பொருநை ஆற்றங்கரை நாகரிகம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் செழித்தோங்கியுள்ளது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT