தமிழ்நாடு

தமிழகத்தில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4ல் தேர்தல்

DIN

தமிழகத்தில் காலியாகவிருக்கும் 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாட்டில் காலியாகவிருக்கும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பினை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் அதிமுகவைச் சேர்ந்த வைத்திலிங்கமும் கே.பி. முனுசாமியும் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதிமுகவின் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

Caption

இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 22ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்பு மனு பரிசீலனை 23ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு 27ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT