முகப்பு
தமிழ்நாடு

ஆர்.எம். வீரப்பனின் 95-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
ஆர்.எம். வீரப்பனின் 95-ஆவது பிறந்தநாளையொட்டி நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பகிர்:

எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

திராவிட இயக்க மூத்தத் தலைவரும் எம்ஜிஆர் கழகத் தலைவரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் இன்று தனது 95 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

அரசியலில் மூத்த தலைவரான இவர், திமுக நிர்வாகிகளுடனும் நட்பு பாராட்டி வருகிறார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆர்.எம்.வீரப்பனுக்கு மாலை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினரும் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.