தமிழ்நாடு

நெல்லையில் ரூ. 15 கோடியில் 'பொருநை' அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு

DIN

நெல்லையில் ரூ. 15 கோடியில் 'பொருநை' அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 

கீழடி அகழாய்வை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. கீழடி அகழாய்வு மூலம் சங்ககால தமிழர்களின் வரலாற்றை உலகமே அறிந்துள்ளது. ஆனால், மத்திய அரசு இந்த அகழாய்வை பாதியிலே கைவிட்டது. 

கீழடியில் கண்டறியப்பட்ட வெள்ளிக்காசு மௌரியப் பேரரசர் அசோகர் காலத்துக்கு முந்தையது. கி.மு. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வரலாற்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது. அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்கல் ஆய்வு மையம் இதனைக் கண்டறிந்துள்ளது. 

அதன்படி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது ‘பொருநை அருங்காட்சியகம்’என அழைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT